சகியே என் இனிய சகியே

நாளாம் நாளாம் திருநாளாம் மங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம்.

எனக்கு தெரியாது நீ சென்னை வந்து இறங்கின உடனே நேர குரோம்பேட் வந்து என் பேர குழந்தையோடு பிறந்தநாள் விழாவுக்கு வந்துட்டு அதுக்கப்புறம்தான் நீ மேற்கொண்டு இங்கேயும் போகலாம் என்று சொல்லி போன் கீழே வைத்துவிட்டார் சந்திரா. நான் என்ன செய்வது என்று தெரியாமல் கணவரின் முகத்தை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன் இரண்டு நாள் பயணம் தில்லியிலிருந்து தமிழ்நாட்டிற்கு அதில் என் சித்தியின் எழுபதாவது பிறந்த நாளை அட்டென்ட் செய்ய வேண்டும் என் நாத்தனார் வீட்டுக்குப் போக வேண்டும் மச்சினர் வீட்டிற்கு போக வேண்டும் மற்றும் இன்னும் சில உறவுகள். இதில் சந்திராவின் குடும்ப விழாவுக்கும் போகவேண்டும். நான் சரி என்று சொன்னால்கூட கணவரும் அதற்கு ஒத்துக்க வேண்டுமே. (என்னவோ பெரிய கணவர் என்ன சொன்னாலும் அதைக்கேட்டு நடக்கிற மாதிரி தான் அப்படின்னு சொல்றது தெரியுது) . என்னையும் சந்திராவையும் பற்றி நன்கு அறிந்த படியால் என்கணவர் சரி நாம் குரோம்பேட் சென்று சிறிது நேரம் இருந்துவிட்டு பிறகு தாம்பரம் போகலாம் என்றார். வேறென்ன சொல்வார். சந்திரா என் தோழி மட்டுமல்ல, எங்கள் குடும்ப நண்பர். குடும்பத்தில் இருக்கும் குழந்தைகள் முதல் வயதானவர் வரை எல்லோரும் அவரைப் பற்றி நன்கு அறிவார்கள். முதலில் என் தோழி என்று அறிமுகமாகி இப்போது குடும்பத்தில் இருக்கும் , குடும்பத்தின் நண்பர்கள் அனைவருக்குமே, மிகவும் பரிச்சயமான நண்பர் ஆவார். எங்கள் சிலரின் குருவும் கூட. காலை எழுந்தது முதல் அரக்கப்பரக்க ஏதோ சமைத்தோம் சாப்பிட்டோம் அலுவலகம் சென்று வந்தோம் என்று இருக்கும் என் வாழ்வில் அவ்வப்போது கடவுளின் நாமங்கள் எப்போதாவது ஒலிக்க செய்வதென்றால் அது இந்த சந்திராவின் மூலமாகத்தான். ஏன் சும்மா உட்கார்ந்து இருக்கிறாய் கொஞ்ச நேரம் லலிதா சஹஸ்ரநாமம் சொல்லேன், நாராயணியம் ஏன் பாராயணம் செய்யக் கூடாது , தேவி மஹாத்மியம் ஏன் படிக்க கூடாது என்று அவ்வப்போது என்னை கெஞ்சி கொஞ்சி கத்தி திட்டி என்னையும் கொஞ்சம் பதப்படுத்த பார்ப்பாள் சந்திரா. ஏனென்றால் நாராயணியம் வேறு சந்திரா வேறு என்று பிரிக்க முடியாமல் அதிலேயே தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவள். முதலில் யாரோ ஒன்றிரண்டு பெயர்களுக்கு நாராயணீயம் சொல்லிக் கொடுக்கிறேன் என்று ஆரம்பித்து அதன் பிறகு தில்லியின் புற நகர் பகுதிகளில் நாராயணியம் என்றாலே சந்திரா என்ற பெயர் உருவாகும் நிலையானது. எப்பொழுது யார் எனக்கு இந்த ஸ்லோகம் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டு போனாலும் அவர்கள் வீட்டு கதவு திறந்தே இருக்கும். இப்பொழுது தில்லியிலிருந்து சென்னை சென்று விட்டால் கூட இன்னமும் அவளுடைய வகுப்புகள் டிஜிட்டல் முறையில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

பலமுறை நான் இந்த இயந்திர வாழ்க்கை கதியில் என்மனம் அலத்து சலிக்கும் போதெல்லாம் என்னை தட்டி எழுப்பி எனக்கு கை கொடுப்பாள் சந்திரா. அது எனக்கு உடம்பு சரியில்லாத போது மருத்துவமனையில் என்னை பார்த்துக் கொள்வதற்காக அங்கேயே தங்கி இருந்தாலும் சரி இல்லை ராத்திரி 9 மணிக்கு உடம்பு சரியில்லாத என் அப்பாவை போய் பார்க்க வேண்டும் என்று கூறியவுடன் நான் இருக்கிறேன் என்று ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வந்து என்னை அழைத்து செல்வதில் ஆகட்டும் எல்லாவற்றிலும் எனக்கு தோள் கொடுத்து நிற்கும் நண்பேண்டா.

அன்னதான பிரபுவே என்று தன் வாழ்க்கையை உருவகப் படுத்திக் கொண்டவர் ஹரிஹரன் அவர்கள். செய்து வந்த வங்கி வேலையை கூட விட்டுவிட்டு மானிட சேவையே மகேசன் சேவை என்று எங்கெல்லாம் சேவைக்கு வாய்ப்பு உண்டோ அங்கெல்லாம் நான் இருப்பேன் என்று சொல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஹரிகரன் அண்ணா. முத்தான ரெண்டு பிள்ளைகளை பெற்று ஆளாக்கி அவர்களின் குழந்தைகள் வளர்ந்து வருவதைக் கண்டு களித்துக்கொண்டிருக்கும் சந்திராவும் ஹரிஹரன் அண்ணாவும் இன்று திருமண நாளை கொண்டாடுகிறார்கள். நாராயணியமும் சந்திராவையும் எப்படி பிரிக்க முடியாதோ, அன்ன தானத்தையும் ஹரிகரன் அவர்களையும் எப்படி பிரிக்க முடியாதோ அது போல் என்றென்றும் நீங்கள் இருவரும் இணைந்து இருந்து எல்லாவிதமான செல்வ செழிப்போடு வாழ்ந்து எங்கள் எல்லோருக்கும் இப்படியே வழிகாட்ட அந்த குருவாயூரப்பனின் அருள் பெற வாழ்த்தி வணங்குகிறோம். ஹாப்பி வெட்டிங் டே

இந்த வாழ்த்து நான் மட்டும் கூறுவது அல்ல தில்லியில் உள்ள அனைவரும் எங்கள் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் நண்பர்கள் அனைவரும் மனதில் ஓடும் அலை ஓசை தான் இது. நாளாம் நாளாம் திருநாளாம் மங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம். இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s